அஜீரணம் குணமாக மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வு

அஜீரணம் குணமாக மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வு சித்த மருத்துவம் முறையில் இந்தப் பதிவில் நம் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் நீங்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.எளிதில்  குணப்படுத்தக்கூடிய  இந்த..

அஜீரணம் குணமாக மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வு

அஜீரணம் குணமாக மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வு

அஜீரணம் குணமாக மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வு

அஜீரணம் குணமாக மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வு சித்த மருத்துவம் முறையில் இந்தப் பதிவில் நம் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் நீங்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.எளிதில்  குணப்படுத்தக்கூடிய  இந்த வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறு நீங்க எளிய வைத்தியம் இப்பொழுது நாம் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பதிவில் நம் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் நீங்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.

அஜீரணம் குணமாக

அஜீரணம் என்றால் என்ன?. அஜீரணம் நம் அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஒரு முக்கியமான தொந்தரவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் இந்த அஜீரணக் கோளாறு உணவு சரியாக செரிக்காமல் இருந்தால் அல்லது கடுமையான உணவு உட்கொண்டால் இந்த அஜீரண கோளாறு உண்டாகும். அஜீரணம் in English ஆங்கிலத்தில் அஜீரணம் என்றால் indigestion ஆகும். 

அஜீரணம் ஏற்பட காரணம்

உண்ட ஆகாரம் சில சமயம் ஜீரணமாகாமலிருக்கும். இதன் காரணமாக வயிற்றில் வலி உண்டாகும். வயிறு உப்பிசமடையும். புளித்த ஏப்பம் வரும். உண்ட ஆகாரம் கடுமையானதாக இருந்தால், இந்தக் கோளாறுகளுடன் வயிற்றுப் போக்கும் இருக்கும். இதைப்போக்க கீழ்க்கண்ட மருந்துகள் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கின்றன.

அஜீரணம் அறிகுறிகள் | ajeeranam symptoms in Tamil

வாய் குமட்டுதல், வாய் துர்நாற்றம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வாய் புளித்தல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாயு தொல்லை, வயிறு உப்புசம் இவை அனைத்துமே பொதுவான அஜீரணம் அறிகுறிகள் ஆகும்.

அஜீரணம் வீட்டு வைத்தியம் | Ajeeranam

அடிக்கடி அஜீரணம் ஏற்பட்டால் வீட்டிலேயே இந்த எளிய மருந்து செய்து வைத்துக்கொள்ளுங்கள் அஜீரணம் அவ்வப்போது ஏற்படும்போது இதை பயன்படுத்துங்கள்.

 தேவையான பொருட்கள்:

  •  குப்பைமேனி இலை
  •  உப்பு

செய்முறை:

அஜீரணம் குணமாக குப்பை மேனி இலையில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதே அளவு உப்பையும் அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறிக் கொண்டே யிருந்தால் உப்பும் இலையும் கலந்து வெந்து சிவந்து கருகும். நன்றாகக் கருகி இலை தூளாகி விட்டபின் சட்டியை இறக்கி ஆறவைத்து, அம்மியில் வைத்துப் பட்டுப் போல தூள் பண்ணி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். அஜீரணம் என்று தெரிந்த வுடன் காலை, மாலை அரைத்தேக்கரண்டியளவு தூளை வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் கொடுத்து வந்தால் அஜீரணம் மாறி நல்ல பசி உண்டாகும்.

அஜீரணம் வயிற்று வலி | வயிறு அஜீரணம் , அஜீரண வயிற்றுப்போக்கு

முக்கியமான அஜீரண தொந்தரவு என்றால் அது ஏற்படுத்தும் வயிற்று வலி தான். அஜீரணம் ஏற்படும் வயிற்று வலியை எளிதில் குறைக்க இவ்வாறு செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  •  சீரகம்
  •  மிளகு
  •  உப்பு
  •  தண்ணீர் 

செய்முறை:

அஜீரணம் ஏற்பட்டு புளியேப்பம், வயிறு உப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டுக் கஷ்டப்பட்டால் தேக்கரண்டி யளவு சீரகம், அரைத் தேக்கரண்டியளவு மிளகு, மொச்சைக் கொட்டையளவு உப்பு இவைகளை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, வாயில் போட்டு விழுங்கச் செய்து சிறிதளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒருமணி நேரத்தில், உண்ட ஆகாரம் செரித்து, புளி யேப்பம் நின்று வயிற்று உப்பிசம் அடங்கி வயிற்றுவலி குறைந்து, நல்ல பசி உண்டாகும்.

நெஞ்செரிச்சல் அஜீரணம்

அடிக்கடி அஜீரணம் ஏற்பட்டு தீராத நெஞ்சு எரிச்சல் இருந்தாள் இந்த மூலிகை மருத்துவத்தை செய்து பாருங்கள் செய்யக்கூடிய வைத்தியம்தான் நல்ல பலன் தரும்.

தேவையான பொருட்கள்:

  •  நாயுருவி வேர்
  •  தண்ணீர் 

செய்முறை:

நாயுருவி வேரைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி பொடியாக நறுக்கி, ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதித்தபின் இறக்கி வடிகட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சு எரிச்சல் குறைந்து அஜீரணம் மாறி நல்ல ஜீரண சக்தி உண்டாகும். பசி எடுக்கும்.

அஜீரணம் வாயு தொல்லை

உணவு சரியாக செரிமானம் ஆகாமல் அது அஜீரணம் வாயு தொல்லை ஏற்படுத்தினால் மிகவும் சிரமமாக இருக்கும். அஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வாயு தொல்லைகளுக்கும் இந்த எளிய வீட்டு வைத்தியம் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  •  வெற்றிலை
  •  மிளகு
  •  சீரகம்
  •  வெந்நீர் 

செய்முறை:

ஒரு வெற்றிலையை சுத்தம் பார்த்து அதில் ஏழு மிளகையும், சுண்டைக்காயளவு சீரகமும் சேர்த்து மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கச் செய்து சிறிதளவு வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், அனைத்து விதமான அஜீரண வாயு தொல்லைகளும் நின்றுவிடும் மேலும் அஜீரணம் குறைந்து நல்ல பசி உண்டாகும்.

குழந்தைக்கு அஜீரணம்

பெரியவர்கள் மற்றும் இல்லாமல் சிறு குழந்தைகளுக்கும் அஜீரணம் அவ்வப்போது  ஏற்படும்.  குழந்தைகளுக்கு அஜீரணம் குழந்தைகள் உட்கொண்ட உணவு சரிவர செரிமானம் ஆகாவிட்டால் அஜீரணம் ஏற்படும். குழந்தைகளுக்கு அஜீரணம் குணமாக இந்த மிகவும் எளிய வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள் நல்ல பலன் தரும்.

தேவையான பொருட்கள்:

  •  கருவேப்பிலை
  •  இஞ்சி
  •  சீரகம்

செய்முறை:

ஒரு டம்ளர்  தண்ணீரில் கருவேப்பிலை இஞ்சி சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு சிறிதளவு  கொடுத்து வந்தாள் எளிதில் குழந்தைகளுக்கு உண்டாகும் அஜீரண கோளாறுகள் குணமடையும்.

அஜீரணம் குணமாக

அஜீரணம் குணமாக உடனடி மருத்துவம் இப்பொழுது இதை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • சம்பங்கி பூ
  • தண்ணீர் 

செய்முறை:

சம்பங்கிப் பூவில் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரைமணி நேரம் வரை ஊறியபின் பூக்களை எடுத்துவிட்டு அந்த நீரை மட்டும் குடிக்க வேண்டும். காலை, பகல், மாலையாக மூன்றே வேளை சாப்பிட்டால் போதும். அஜீரணம் மாறி ஆகாரம் செரிமானமாகி நல்ல  பசி உண்டாகும்.

நாம் அஜீரணம் குணமாக மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வு தெரிந்து கொண்டோம். மேலும் சித்த மருத்துவம் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *