உடல் சூடு குறைய விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்து செய்வது எப்படி?
உடல் சூடு குறைய விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்து செய்வது எப்படி? பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த உடல் சூடு ஆனது ஒரு பிரச்சனை தான் இந்த பதிவில் நம்ம நம் உடலில் ஏற்படும் சூட்டை குறைக்க எளிய முறை நாட்டு மருந்து மற்றும்

உடல் சூடு குறைய விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்து செய்வது

உடல் சூடு குறைய விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்து செய்வது எப்படி? பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த உடல் சூடு ஆனது ஒரு பிரச்சனை தான் இந்த பதிவில் நம்ம நம் உடலில் ஏற்படும் சூட்டை குறைக்க எளிய முறை நாட்டு மருந்து மற்றும் வீட்டு மருத்துவம் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உடல் சூடு குறைய விளக்கெண்ணெய்
உடல் சூடு குறைய விளக்கெண்ணெய் வைத்து எப்படி வைத்தியம் செய்ய வேண்டும். நம் அனைவருக்கும் இந்த வைத்திய முறை ஒன்றும் புதுசு இல்லை நம் அனைவர் வீட்டுலயுமே விளக்கெண்ணெய் வைத்திருப்போம் உடல் சூடு பிரச்சனைகள் ஏற்படும் போது விளக்கெண்ணையை உங்கள் தொப்புளில் சிறிதளவு தடவினாலே இது உடனடியாக உடல் சூட்டை சிறிது குறைக்கும்.
உடல் சூடு அறிகுறிகள்
ஒரு சிலருக்கு உடலில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல இருக்கும். இதைப் போக்கக் கீழ்க்கண்ட மருத்துகள் நன்கு பயன்படும்.
உடல் சூடு குறைய விளக்கெண்ணெய்
உடல் சூடு குறைய நாட்டு மருந்து
ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தம் செய்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு தேக்கரண்டி அளவு பசுவின் நெய்யை விட்டு சட்டியை அடுப்பில் வைத்து பூவை லேசாக வதக்கி ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளையில் மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம அளவிற்கு வரும்.
நெருஞ்சில் செடியைக் கொண்டு வந்து, நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, அதே அளவு அருகன்புல்லையும் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை மாலை அரை டம்ளர் வீதம் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமநிலைக்கு வரும்.
அமுக்கினான் கிழங்கை வாங்கி வந்து 5 கிராம் எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை மாலை அரை டம்ளர் அளவு வீதம் மூன்று நாட்கள் ஆறு வேளை சாப்பிட்டால் போதும். உடல் சூடு தணிந்து சமநிலைக்கு வரும்.
உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்
தேவையான அளவு பொன்னாங்கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து பெரிய வெங்காயம் ஒன்றைப் பொடியாக நறுக்கி அத்துடன் சேர்த்துப் பொரியல் செய்து பகல் உணவில் சேர்த்து தேக்கரண்டி அளவு பசுவின் நெய் சேர்த்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து சமநிலைக்கு வரும்.
புளிச்சக் கீரையைக் கொண்டு வந்து அதை ஆய்ந்து புளி விடாமல் கடைந்து தினசரி பகல் உணவுடன் சேர்த்து, தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணியும். சமநிலைக்கு வரும்.
வில்வ இலையைக் கொண்டு வந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து 30 கிராம் வெங்காயத்தை உரித்து அம்மியில் வைத்து நைத்து அதில் போடவேண்டும். தேக்கரண்டி அளவு மிளகு, அதே அளவு வெந்தயம் இவைகளையும் நைத்துப் போட வேண்டும். பிறகு மூடி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். காலை மாலை அரை டம்ளர் வீதம் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடற் சூடு தணியும். மருந்து சாப்பிடும் மூன்று நாட்களுக்கும் புளியைச் சேர்க்கக் கூடாது.
கானாம் வாழை இலையைக் கொண்டு வந்து சுத்தமாக ஆய்ந்து எடுத்து, அந்தக் கீரை இருக்கும் அளவில் பாதி அளவு துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து, உப்புக் காரம் தேங்காய் சேர்த்து சமைத்து பகல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணியும். தேவையானால் ஒரு தேக்கரண்டி அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.உடல் சூடு குறைய விளக்கெண்ணெய்
உடல் ஊதல் குணமாக
ஒரு சிலரது உடலில் கெட்ட நீர் உற்பத்தியாகி உடலில் வீக்கம் போல ஊதல் ஏற்படும். இதன் காரணமாக உடல் தடிமனாகும். எந்த வேலையும் செய்ய முடியாது. நாளா வட்டத்தில் உடல் பருத்து மரணத்தை உண்டு பண்ணும், இதை ஆரம்பத்திலேயே தக்க சிகிச்சை அளித்து குணப் படுத்த வேண்டும்.
சோற்றுக் கற்றாழைவேர், கடுக்காய்த் தோல், கையாந்த கரை, கீழாநெல்லி, அத்திப்பருப்பு, கருவேலங்கொழுந்து, களிப்பாக்கு இவைகளை வகைக்கு அரைக் கைப்பிடி அளவாக எடுத்து, அம்மியில் வைத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் உடல் ஊதல் படிப்படியாகக் குறைந்து இயற்கை நிலை வரும். ஊதல் தணியும் வரை இந்த கஷாயத்தையே கொடுத்துவர வேண்டும். இந்த மருந்தைக் கொடுத்து வரும்போது பத்திய உணவே கொடுத்துவர வேண்டும்.
நாம் உடல் சூடு குறைய விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்து செய்வது தெரிந்து கொண்டோம். மேலும் சித்த மருத்துவம் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.