காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் – வெள்ளை காளை மாடு கனவில் வந்தால் ??

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா?! அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையில் கனவுகள் வரும் வெவ்வேறு விதமான கனவுகள் வரும் அதில் குறிப்பாக இந்த பதிவில் நம் கனவில் காளை மாடு வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் பொதுவாக கனவில் காளை மாடு வந்தால் அது ஒரு

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா?! அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையில் கனவுகள் வரும் வெவ்வேறு விதமான கனவுகள் வரும் அதில் குறிப்பாக இந்த பதிவில் நம் கனவில் காளை மாடு வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் பொதுவாக கனவில் காளை மாடு வந்தால் அது ஒரு அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது  இந்த கனவு ஆண்களுக்கு நிறைய பலன் தரக்கூடியது அவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் ரீதியான நிறைய பலன்கள் ஏற்படும் காளைமாடு கனவில் வந்தால் ஒரு சில கனவுகள் நன்மையும் தரும் மற்றும் தீமையும் தரும் இப்பொழுது நம்ம காளை மாடு நாம் கனவில் வந்தால் என்ன பலன் என்று விரிவாக பார்க்கலாம்.

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா பொதுவாக காளைமாடு கனவு வந்தாலே அது ஒரு நல்ல சகுனம் தான் இந்த மாதிரி கனவு ஏற்பட்டால் கனவு காண்பவருக்கு ஏதாவது நற்செய்தி வந்தடையும் கனவு வந்ததிலிருந்து கனவு காண்பவர் மிகவும் தைரியமாக இருப்பார் எந்த காரியத்தையும் துணிந்து செயல்படுவார்.

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவு காண்பவருக்கு கனவில் காளை மாடு தன்னை போல் கனவு வந்தால் ஏதோ ஒரு ஆபத்து அவரை நெருங்கியது என்று குறிக்கிறது. துரத்தி வந்த காளையை தான் பயந்து ஓடுவதாகவும் கனவு கண்டால், தனக்கு ஒரு கஷ்டம்-ஒரு விபத்து ஏற்படப் போகிறது என்பதை அறியலாம்.

கருப்பு காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் கனவில் ஒரு கருப்பு காலை மாடு வந்தால் இது ஒரு துர்க்க செய்தியை குறிக்கும். இந்த மாதிரி கனவு காண்பவருக்கு தன் மனைவியிடம் அடிக்கடி சண்டைகள் ஏற்படலாம் தொழிலில் நிறைய போட்டி பொறாமைகள் உண்டாகும் என குறிக்கிறது மேலும் உத்தியோகத்தில்  மேல் அதிகாரிகளால் குடைச்சல் ஏற்படலாம். எனவே கனவு காண்பவர் இக்கால கட்டங்களில் சிந்தித்து செயல்படுவதே நல்லது.

வெள்ளை காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

வெள்ளை காளை மாடு உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் உடனே முடிவடையும் என்று குறிக்கிறது. கனவு காண்பவருக்கு தன் குடும்பத்தினர்களுடன் சற்று சந்தோசமான நேரங்களை செலவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் ஏதாவது வழக்கு நிலுவையில் இருந்தால் அது உடனே முடிவடையும் உங்களுக்கு சாதகமாக.

சிவப்பு காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

சிவப்பு நிற காளை மாட்டை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு அதிக கோபம் ஏற்படலாம் என்று குறிக்கிறது. எனவே இந்தக் காலகட்டங்களில் காண்பவர் சற்று கோபத்தை கட்டுப்படுத்தினால் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எந்த கசப்பான சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருக்கலாம்.

கனவில் காளை மாடு தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தால்

காளை மாடு தன் பக்கத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், அது தன்னை அன்போடு பார்ப்பதாகவும் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு வேண்டிய பட்டவர்கள், மேம்பட்டவர்கள் இனிமேல் உங்களை அன்போடு நடத்துவார்கள். அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று அறியவும். மேலும் கனவு காண்பவருக்கு தன்னை சுற்றி உள்ளவர்களால் அதிகம் நேசிக்கப்படுவார்.

காளை மாடு உங்களைப் பார்த்து ஓடுவதாக கனவு கண்டால்

காளை மாடு உங்களை நெருங்கி ஒன்றும் செய்யாமல் ஓடுவதாகக் கனவு கண்டால் உங்கள் கஷ்டம் படிப்படியாகக் குறையும் என்பதை அறியலாம். காளை மாடு வீட்டினுள் புகுந்து விட்டதாகக் கனவு கண்டால், உங்கள் குடுபத்தில் ஒரு பெரிய ரகளை நடக்கப் போகிறது என்பதை அறியலாம்.

காளை மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

காளை மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன் காளை மாடு உங்களை முட்டித் தள்ளியதாகவோ, முட்ட வருவதாகவோ கனவு கண்டால், உங்களுக்கு ஒரு பெரிய விபத்து ஏற்படப் போகிறது என்பதை அறியலாம். மேலும் கனவு காண்பவர் கனவு வந்த நாளிலிருந்து வெளி பயணங்களை சற்று தவிர்க்கலாம்.

காளை மாடு மேல் சவாரி செய்வதாக கனவு கண்டால்

நீங்கள் உங்கள் கனவில் ஒரு காளை மாட்டின் மீது சவாரி செய்வதாகக் கனவு கண்டால் உங்களுக்குப் பதவி உயர்வோ அல்லது குடும்பத்தில் மதிப்போ உயரப் போகிறது என்பதைக் காட்டுகிறது. கனவு காண்பவருக்கு தொழில் மற்றும் வியாபாரம் வெற்றியை கொடுக்கும் புதிய முயற்சிகள் தாராளமாக இருக்கலாம்.

காளை மாடு கண்ணீர் விடுவதாக கனவு கண்டால்

நீங்கள் உங்கள் கனவில் காளை மாடு கண்ணீர் வடிப்பதாகக் கனவு கண்டால், உங்கள் குடும்பத்தில் துக்ககரமான நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது. கனவு காண்பவருக்கு தன் குடும்பத்திலையோ அல்லது நண்பர்களிடையே ஏதாவது கசப்பான விஷயங்கள் ஏற்படலாம்.

காயம் பட்ட காளை மாடு கனவில் வந்தால்

உங்கள் கனவில் காளை மாடு காயம் பட்டு இரத்தம் வடிவதாகக் கண்டால், உங்கள் குடும்பத்தில் எவருக்கோ ஆபத்து விளைவிக்கும் விபத்து நடக்கப் போகிறது எனக் கருதலாம். மேலும் கனவு காண்பவரின் தந்தை அல்லது சகோதரருக்கு ஏதாவது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

காலை மாட்டை நீங்கள் அடக்குவது போல் கனவு வந்தாள்

உங்கள் கனவில் நீங்கள் ஒரு காளை மாட்டை அடக்குவது போல் வந்தால் வரும் பிரச்சனைகளை நீங்கள் சுலபமாக தீர்த்து விடுவீர்கள் என்று குறிக்கிறது யாரோட உதவியும் தயவும் தேவைப்படாது மேலும் உங்கள் தொழிலில் நீங்கள் தான் ராஜாவாக இருப்பீர்கள் நிறைய லாபம் ஏற்படும். இந்த மாதிரி கனவு வந்தால் கனவு காண்பவருக்கு தனது காதல் வெற்றியடையும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கொம்பு இல்லாத காளை மாடு உங்கள் கனவில் வந்தால்

உங்கள் கனவில் ஒரு காளை மாடு கொம்பு இல்லாமல் வந்திருந்தால் கனவு காண்பவருக்கு இது எதை குறிக்கிறது என்றால் தனக்கு நிறைய சூழ்ச்சிகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கு எனவே கனவு காண்பவர் சற்று நிதானமாக செயல்பட்டால் இந்த சூழ்ச்சியில் இருந்து வெளியே வரலாம். மேலும் குடும்பத்தில் மாமியார் மாமனார் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த பதிவில் 

நாம் கனவில் காளை மாடு வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். மேலும் கனவு பலன்கள் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *