ஜீரண சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்
ஜீரண சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம் என்ன?? நமது அனைவருக்கும் குழந்தைகள் முதல் பதிவர்கள் வரை இந்த ஜீரண சக்தி பிரச்சனை ஒன்றும் அரிதான பிரச்சனை இல்லை எல்லோருக்கும் அவ்வப்போவது ஏற்படும் பிரச்சனை தான். நாம் சாப்பிடும் உணவு சரிவர செரிமானம் ஆவதில் முக்கிய பங்கு இந்த ஜீரண சக்திக்கு உண்டு.

ஜீரண சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்

ஜீரண சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம் என்ன?? நமது அனைவருக்கும் குழந்தைகள் முதல் பதிவர்கள் வரை இந்த ஜீரண சக்தி பிரச்சனை ஒன்றும் அரிதான பிரச்சனை இல்லை எல்லோருக்கும் அவ்வப்போவது ஏற்படும் பிரச்சனை தான். நாம் சாப்பிடும் உணவு சரிவர செரிமானம் ஆவதில் முக்கிய பங்கு இந்த ஜீரண சக்திக்கு உண்டு.
5 ஜீரண சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்
உங்கள் ஜீரண சக்தியை அதிகப்படுத்தக்கூடிய எளிய பாட்டி வைத்தியம் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர் மற்றும் சிறியவர் அனைவருமே இந்த மூலிகை மருத்துவத்தை பயன்படுத்தி தங்களது ஜீரண சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
1. இளம் பிரண்டையாகப் பார்த்து ஒரு விரல் நீளம் எடுத்து, அதைப் பொடியாக நறுக்கி, வறுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து துகையல் அரைத்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
2. திப்பிலி, சுக்கு, மிளகு வகைக்கு 5 கிராம் எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து துணியில் வடிகட்டி அரை டம்ளர் அளவு கஷாயத்தில் அரை எலுமிச்சம்பழச் சாறு விட்டுக் கலக்கி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை, பகல், மாலையாக மூன்றே வேளை கொடுத்து வந்தால் ஜீரண சக்தி உண்டாகும். பசி உண்டாகும்.
3. சிவகரந்தை இலையைக் கொண்டு வந்து நைத்து எடுத்து ஒரு தேக்கரண்டியளவு சாற்றுடன் அதே அளவு தேன் சேர்த்துக் குழைத்து காலை மாலையாக ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுத்து வந்தால் நல்ல பசி உண்டாகும்.
4. சம்பங்கிப் பூவில் ஐந்து பூக்களை எடுத்து சுத்தம் பார்த்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து பூக்களை எடுத்துவிட்டு நீரைக் குடித்துவிட வேண்டும். இவ்வாறு மூன்றே வேளை குடித்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
5. இஞ்சியின் தோலைச் சிவிவிட்டு அதை மெல்லிய வட்ட பில்லைகளாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஒருவாணலியை அடுப்பில் வைத்து, இஞ்சியிருக்கும் அளவில் மூன்றில் இரண்டு பங்கு சர்க்கரையைப்போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கிளறிக் கொண்டேயிருந்தால் சர்க்கரை கரைந்து பாகாக வரும். அந்தச் சமயம் இஞ்சித் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளறிக்கொண்டேயிருந்து, இஞ்சி வெந்தபின் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஆறிய பின் வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக்கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
நாம் ஜீரண சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம் தெரிந்து கொண்டோம். மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.