பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன்

பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன்கள் என்றால் அனைவருக்கும் தினசரிகளில் பசுமாடு கனவு ஒரு பொதுவான கனவு தான்.”பசுவைக் கனவில் கண்டேன்” என்று நினைத்து பலனை அறிய முயற்சி செய்தால் அது பயனற்றச் செயலாகும்.

பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன்

பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன்

பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன்

பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன்கள் என்றால் அனைவருக்கும் தினசரிகளில் பசுமாடு கனவு ஒரு பொதுவான கனவு தான்.”பசுவைக் கனவில் கண்டேன்” என்று நினைத்து பலனை அறிய முயற்சி செய்தால் அது பயனற்றச் செயலாகும். கனவில் கண்ட பசு என்ன செய்து கொண்டிருந்தது என்பதையும் நினைத்து, அதற்கேற்ற பலனை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் சரியான பலனை அறிய முடியும். அதோடு குறிப்பிட்ட மிருகம் எவ்வளவு தூரத்திலிருந்தது என்பதையும் நினைவில் வைத்துப் பார்க்க வேண்டும்.

பசு மாடு கனவு பலன்கள்

இப்பொழுது இந்த பதிவுகள்  பசுமாடு அவர் பலன்களை விரிவாக பார்க்கலாம்  எந்த மாதிரி கனவு வந்தால் இந்த மாதிரி பயன் தரும்?. எங்கள் கனவு காணும்போது  பசுமாடு என்ன செய்கின்றனர் அதற்கு என்ன பலன் நமக்குத் தரும் இந்த மாதிரியான கனவு நமக்கு நன்மையா இல்லை தீமையா?.

கறவைப் பசு தன்னைப் பார்ப்பதாகக் கனவு கண்டால்

ஒரு கறவைப் பசு தன்னைப் பார்ப்பதாகக் கனவு கண்டால்,கனவு காண்பவருக்கு தன் தொழில் முறை எதுவாக இருந்தாலும் அதில் முன்னேற்றம் ஏற்படும்.தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு  விரைவில் ஒரு உச்சத்தை தொடுவார்.மேலும் நீண்ட காலமாக சடங்கு நடக்கும் காரியம் கூடியவிரைவில் நல்லபடியாக நடந்து முடியும்.

 ஒரு பசு தன்னை கோபமாகப் பார்ப்பதாகக் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு தன் தொழில் முறையில் மேல் அதிகாரியினால் சில பயமுறுத்தல்கள் ஏற்படும்.பணியிடங்களில்  மேல் அதிகாரிகளிடம் பெற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும் மேலும் நாம் செய்யும் வேலையில் சிறிதளவு கவனம் செலுத்தி செய்ய வேண்டும்.

பசுமாடு தன்னை முட்ட வருவதாகக் கனவு கண்டால் 

பசுமாடு தன்னை முட்ட வருவதாகக் கனவு கண்டால்  கனவு காண்பவருக்கு குடும்பத்திலும், தொழில் முறையிலும் சில தகராறுகள் ஏற்படும். ஸ்மார்ட் தன்னை முட்டை வருவதாக கனவு  கண்ட  நபருக்கு  அவர்களின்  நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக ஏதோ ஆபத்து வரும் என்று குறிக்கிறது. எனவே கனவு காண்பவர் சற்றே கவனத்துடன் செயல்படுவது நல்லதைத் தரும்.

பசுமாடு  தன்னை முட்ட வந்து அதிலிருந்து நாம் தப்பிப்பது போல் கனவு வந்தால் நமக்கு ஏதோ கெட்டது  நடக்க உள்ளதாகும் அதில் நம் சுலபமாக தப்பித்து விடுவதாக குறிக்கிறது.

பசுமாடு அடித்து கனவு கண்டால் பசுமாடு கனவு பலன்கள்

ஒரு பசுமாடு தன்னை முட்டித் தள்ளியதாகக் கனவு கண்டால் கனவு காண்பவர்க்கு குறுகிய காலத்தில் தனக்கு ஒரு விபத்து ஏற்படப் போகிறது என்பது உறுதி.எனவே கனவு காண்பவர்  சற்று சிந்தித்து வெளியூர் பயணங்களை முற்றிலும் தவிர்க்கலாம் மற்றும் வண்டி வாகனத்தில் பயணம் செய்வதை சற்று குறைத்துக் கொள்ளலாம்.

பசு மாடு கனவில் வந்தால் தன்னை விரட்டுவதாகக் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு தன் குடும்பத்தில் ஒரு பெரிய தகராறு ஏற்படும்.வீட்டில் தீராத கஷ்டங்களும் பணக்கஷ்டம்,  குடும்பத்தினருக்கு ஏதாவது  உடல் ரீதியான கஷ்டங்களும் ஏற்படலாம். 

 பசு தன் வீட்டினுள் புகுந்து விட்டதாகக் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு அன்று முதல் உங்கள் கஷ்டம் விலகி விட்டதென்றும், இனிமேல் உங்கள் வருமானத்தில் உயர்வும், குடும்பத்தில் உற்சாகமும் ஏற்படும்.இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் உடனடியாக தீரும் என்று இந்த கனவு குறிக்கும். வீட்டில் தடைபட்டு உள்ள சுபகாரியங்களும்  இனிதாகவே நடைபெறும். 

வெள்ளை பசுமாடு கனவு கண்டால்

வெள்ளை பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு தனக்கு ஏற்பட்ட துக்கம் , கஷ்டம் சோர்வு  இவற்றிலிருந்து  கூடிய விரைவில் வெளியே வருவீர்கள் என்று குறிக்கிறது. நீங்கள் கனவில் காணும் பசுமாடு வெள்ளை வண்ணமாக இருந்தால், உங்கள் வாழ்க்கை ஒளி தருவதாக இருக்கும். கனவு காண்பவருக்கு தொழில் அல்லது வேலையில் லாபம் மற்றும் பதவி உயர்வு நடக்கலாம் என்று குறிக்கிறது. எனவே வெள்ளை பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவர் சந்தோசம் அடையலாம்.

கறுப்பு  பசுமாடு கனவு கண்டால்

கறுப்பு  பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு தொழில் மற்றும் வேளையில்  சற்று  ஏற்ற கலங்கள் ஏற்படலாம்.  எனவே கனவு காண்பவர் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது நல்லதாகும்.நீங்கள் கனவில் காணும் பசுமாடு கறுப்பு வண்ணமாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உங்கள் முன்னேற்றத்தில் சிறிதளவு இருள் சூழும் நிலை ஏற்படும்.

சிவப்பு பசுமாடு கனவு கண்டால்

சிவப்பு பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு  அவர்களின் குடும்பத்தினர்  மற்றும்  நண்பர்களிடமிருந்து  ஏதாவது கசப்பான சம்பவங்கள் நடைபெறலாம் என்று குறிக்கிறது.இந்த கனவினால் ஏதும் அசம்பாவிதங்கள்  நடைபெறப் போவதில்லை வரும் சோதனைகள் அனைத்தும் நன்றாக படிக்க முடியும் ஆனால் கனவு காண்பவர் காலகட்டங்களில் சிறிது  கஷ்டப்படுவார். நீங்கள் கனவில் காணும் பசுமாடு சிவப்பு வண்ணமாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்பட்டு விலகும்.

சாம்பல் பசுமாடு கனவு கண்டால்

சாம்பல் பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு கனவு வந்ததிலிருந்து ஒரு வாரத்துக்குள் ஏதாவது எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கலாம். தொழில் புதிய ஏற்றங்கள் ஏற்படலாம்  நீண்ட காலமாக  விஷயங்களிலிருந்து ஏதாவது ஒரு விஷயம் எதிர்பாராமல் நடக்கும். நீங்கள் கனவில் காணும் பசுமாடு காராம் பசு எனும் சாம்பல் வண்ணமாக இருந்தால் உங்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் விரைவில் ஏற்படும்.

பல வண்ணமாக பசுமாடு கனவு கண்டால்

பல வண்ணமாக பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு கனவு வந்தது வந்ததிலிருந்து சில நாட்கள் குழப்பம் அதிகரிக்கும் மேலும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே கலந்து செயல்படும் ஒரு நல்ல விஷயம் நடந்தால் கூடிய விரைவில் ஒரு கெட்டதும் நடக்கும். எனவே கனவு காண்பவர் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் வேலையை மட்டும் செய்தால் நல்லது நடக்கும் புதிய சிந்தனைகள் மற்றும் செயல்கள் தவிர்க்கலாம். நீங்கள் கனவில் காணும் பசுமாடு பல வண்ணமாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் சில நன்மைகளும், தீமைகளும் கலந்து நடைபெறும்.

பசுமாடு கொம்பு இல்லாமல் கனவு கண்டால்

பசுமாடு கொம்பு இல்லாமல் பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பதற்கு தன்னைச்சுற்றி குழப்பமும் ஏமாற்றமும் அதிகரிக்கும். எதையோ பறிகொடுத்தது போல்  நிறைய சிந்தனைகள் உண்டாகும்.நீங்கள் கனவில் காணும் பசுமாடு கொம்பு இல்லாமல் இருந்தால் உங்கள் மனதில் குறைபாடுகள் ஏதேனும் தோன்றி அதனால் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்.இந்த மாதிரியான கனவு வந்ததிலிருந்து பொது வாரத்துக்குள் கனவுகள் அவருக்கு நிறைய  மனக்கஷ்டமும் பணக் கஷ்டமும் ஏற்படும்.

பசுமாடு பால் சொரிவது கனவு கண்டால்

நீங்கள் காணும் கனவில் பசுமாடு பால் சொரிவது போலிருந்தால், உங்கள் வாழ்க்கையில் செல்வம் மழை போல பொழியும்.பசுமாடு பால் சொரிவது கனவு கண்டால் கனவு காண்பதற்கு சம்பள உயர்வு அல்லது தொழிலில் நிறைய லாபம் ஏற்படலாம்.  உங்களுக்கு மேலும் ஏதாவது வர வேண்டிய கடன் தொகை இருந்தால் கூடிய விரைவில் வந்து சேரும்.இந்த மாதிரியான கனவு வந்ததிலிருந்து ஒரு சில நாட்களில்  நிறைய செல்வம் வந்து சேரும்.

பசுங்கன்றைக் கனவு கண்டால்

நீங்கள் உங்கள் கனவில் ஒரு பசுங்கன்றைக் கண்டால், உங்களுக்கு உங்கள் குழந்தையால் அதிர்ஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.பசுங்கன்றைக் கனவு கண்டால்  கனவு காண்பவர்க்கு நிறைய சந்தோசமான செய்திகளை ஏற்படுத்தும்.மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில்  நல்ல முன்னேற்றம் ஏற்படும்  புதிய முயற்சிகளை தாராளமாக  எடுக்கலாம்.

பசுமாடு பால் சுரப்பதற்குப் பதிலாக இரத்தம் சுரப்பதாகக் கனவு கண்டால்

நீங்கள் உங்கள் கனவில் காணும் பசுமாடு பால் சுரப்பதற்குப் பதிலாக இரத்தம் சுரப்பதாகக் கனவு கண்டால், உங்கள் குடும்பத்தில் இரத்த சம்பந்தமான உறவுள்ளவர்கள் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும்.பசுமாடு பால் சுரப்பதற்குப் பதிலாக இரத்தம் சுரப்பதாகக் கனவு கண்டால் கனவு  காண்பவருக்கு   கெட்ட செய்திகள்  ஏற்படலாம்.தன்னை சுற்றி உள்ள நபர்களுக்கு ஏதோ கெட்ட விஷயம் ஏற்படும் என்று குறிக்கிறது இந்தக் கனவு. எனவே  கனவு காண்பவர்  தன் குடும்பத்தினரையும்  மற்றும் நண்பர்களையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

பசுமாடு தன் கன்றுக்கு பால் ஊட்டுவது போல கனவு கண்டால்

நீங்கள் உங்கள் கனவில் ஒரு பசுமாடு தன் கன்றுக்கு பால் ஊட்டுவது போல இருந்தால், உங்கள் குழந்தையின் எதிர்கால பராமரிப்புக்குச் சிறப்பான ஏற்பாடுகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.கனவு காண்பவருக்கு இந்த கனவு நன்மையையே தரும். உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உதவி ஏற்படலாம்.இந்தக் கனவு வந்ததிலிருந்து அடுத்து வரும் நாட்களில் நீங்கள் தயங்காமல் யாருக்கு வேண்ணாலும் உதவி செய்யலாம் அது உங்களுக்கு நன்மையாகும். 

பசுமாடு உங்கள் மீது சிறுநீர் கழிப்பதாகக் கனவு கண்டால்

உங்கள் மீது சிறுநீர் கழிப்பதாகக் பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு  கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று பொருள். நீங்கள் தைரியமாக எந்த புது முயற்சிகளை வேணாலும் எடுக்கலாம்  உங்களுக்கு வெற்றி தான்.நீங்கள் ஒரு பசுமாடு உங்கள் மீது சிறுநீர் கழிப்பதாகக் கனவு கண்டால், வாழ்க்கையில் உங்களுக்குப் புகழும், செல்வாக்கும் ஏற்படும்.

பசுமாடு உங்கள் முன்னால் சாணமிடுவதாக கனவு கண்டால்

உங்கள் முன்னால் சாணமிடுவதாக பசு மாடு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு  அவர்களுடைய தொழில் மற்றும் வேலையில் ஏதாவது உதவி ஏற்படலாம்  உங்களுக்குப் பதவி உயர்வு வெகுவிரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் காணும் கனவில் ஒரு பசுமாடு உங்கள் முன்னால் சாணமிடுவதாக அமைந்தால், உங்களுக்கு எதிர்பாராத உதவி கிடைப்பதைக் குறிக்கும். எதிர்பாராத உதவிகள் நீங்கள் கஷ்டப்படும் போது தானாக வந்து சேரும் என்று இந்தக் கனவு உங்களுக்கு குறிக்கிறது.

இந்த பதிவில்  நாம் பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். மேலும் கனவு பலன்கள் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *