பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் – வெள்ளை பாம்பு கனவில் வந்தால் நன்மையா ?!
பாம்பு கனவில் வந்தால் நாம் அனைவரும் இந்த மாதிரி பாம்பு கனவில் வந்தால் இது ஒரு கெட்ட கனவு என்று நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்றால்… வெள்ளை பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு…

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்

பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்
பாம்பு கனவில் வந்தால் நாம் அனைவரும் இந்த மாதிரி பாம்பு கனவில் வந்தால் இது ஒரு கெட்ட கனவு என்று நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்றால் உங்களுக்கு தெய்வயோகம் கிடைக்கும் என்று குறிக்கிறது. சில பாம்புகளையும் அல்லது பாம்பு கனவில் உங்களை ஏதாவது செய்வது போல் சில கனவுகள் ஏற்பட்டால் அதில் சில நல்ல கனவுகளும் உண்டு கெட்ட கனவுகளும் உண்டு. இப்பொழுது நாம் பாம்பு கனவில் வந்தால் அது நமக்கு நன்மையா அல்லது தீமையா என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா ?
பாம்பை கனவில் கண்டால், தெய்வ பலன்கள் அதாவது உங்களின் நல்ல நேரத்தை விரைவிலேயே அனுபவிப்பீர்கள். ஆயுள் விருத்தியுண்டாகும். பெண்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் விலகும். உடல் வலிமை பெரும் என அர்த்தம்.
பாம்பு உங்கள் உடலின் மேல் ஏறுவது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். தாய் தந்தை வழியில் மன சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பண பிரச்சனை விலகும். மணவாழ்க்கையில் சில பிரச்சனை ஏற்பட்டாலும் பிறகு சுமூகமாக விலகும். அடிக்கடி மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிறு சண்டைகள் ஏற்படலாம் பெரிய அளவிலான பிரச்சனைகள் குறையும்.
வெள்ளை பாம்பு கனவில் வந்தால்
வெள்ளை பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நன்மை தான். மேலும் வெள்ளை நிறம் பாம்பு செல்வதைக் கனவில் கண்டால் தன் கஷ்டங்கள் ஓரளவு குறையும் காலம் வந்து விட்டது என்று அறியவும்.
பச்சை பாம்பு கனவில் வந்தால்
பச்சை பாம்பு கனவில் கனவில் காண்பதற்கு வியாபாரம் அல்லது தொழில் ரீதியாக ஓர் நற்செய்தி விரைவில் வந்து சேரும் என்று குறிக்கிறது. கனவு காண்பவர் தன் மனைவியிடம் மற்றும் குடும்பத்தினர் இடம் நல்ல பெயர் வாங்குவார்.
மரத்திலுள்ள பச்சைப் பாம்பு தரையில் விழுந்து ஓடுவதாகக் கனவு கண்டால் அன்று முதல் உங்கள் கஷ்டம் விலகப் போகிறது. எடுக்கும் எந்தக் காரியத்திலும் வெற்றியடைவீர்கள் என்பதை உணரலாம்.
பச்சைப் பாம்பு உங்கள் மேல் விழுந்து கீழே துள்ளி விழுந்து ஓடுவதைக் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதையும், உங்கள் தொழில் முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக நல்ல வருமானத்துடன் வாழப் போகிறீர்கள் என்பதையும் அறியலாம்.
கனவில் பாம்பு படம் எடுத்தால்
கனவில் பாம்பு படம் எடுத்தால் போல கனவு கண்டால், சில பொறாமை குணம் கொண்டவர்களால், பொருள் விரையம் ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். நண்பர்களால் லாபம் ஏற்படும் என அர்த்தம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தாராளமாக இருக்கலாம்.
மஞ்சள் பாம்பு கனவில் வந்தால்
மஞ்சள் நிறம் பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நீண்ட நாளாக தடை பட்டிருந்த திருமணம் கூடிய விரைவில் கைகூடும். மேலும் வீட்டில் சுப காரியங்கள் நடைபெற போகிறது என்று குறிக்கிறது.
சிவப்பு பாம்பு கனவில் வந்தால்
சிவப்பு பாம்பு கனவில் வந்தால் இது ஒரு கெட்ட செய்தியை குறிக்கிறது கனவு காண்பவரின் தந்தை அல்லது அண்ணன் தம்பி இவர்களுக்கு ஏதோ கெடுதலும் நடக்கப் போகிறது என்று குறிக்கிறது அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என்று குறிக்கிறது.
பாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்
ஏகப்பட்ட பாம்புகள் இணைவதாகக் கனவு கண்டால் உங்கள் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும்.
தண்ணீரில் வசிக்கும் பாம்புகளை ஆற்றிலோ குளத்திலோ கூட்டமாக இருப்பதாகக் கனவு கண்டால் உங்களுக்கு எதிர்பாராத வகையில் கொஞ்சம் பணம் வந்து சேரும். அதனால் உங்கள் கஷ்டம் குறைந்து சுபிட்சமாக வாழப் போகிறீர்கள் என்பதை உணரலாம்.
தண்ணீருக்குள் பாம்பு இருப்பதாகக் கனவு கண்டால் உங்களுக்கு எதிர்பாராத தன வசதி கிடைக்கப் போகிறது.
கிணற்றிற்குள் பாம்பு இருப்பதாகக் கனவு கண்டால் உங்களுக்கு புதையல், பரிசு சீட்டு மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும்.
நல்ல பாம்பு கனவில் வந்தால்
நல்ல பாம்பு சீறிக் கொண்டு கடிக்க வருவது போல கனவு கண்டால், கொஞ்ச காலம் வரை கஷ்டத்தை அநுபவிக்க வேண்டிய காலம் நெருங்கி வருகிறது என்று அறியவும்.
நல்ல பாம்பு சீறிக் கொண்டு வந்து தன்னைக் கடித்து விட்டதாகக் கனவு கண்டால் அன்று முதல் கஷ்டமெல்லாம் மாறி புதிய வாழ்க்கை ஆரம்பமாகி சுபிட்சமான வாழ்வு ஆரம்பமாகப் போகிறது என்று உணரலாம்.
கடிக்க வந்த நல்ல பாம்மை நீங்கள் அடித்துக் கொன்று விட்டதாகக் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட இருந்த நல்ல முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் நீங்கள் போக்கிக் கொண்டீர்கள் என்று அறியலாம்.
நல்ல பாம்பு உங்கள் எதிரே வந்து படம் எடுத்து ஆடிக் கொண்டிருப்பதைக் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்பட்டு, தொழில் முறையில் முன்னேற்றமடைந்து நல்ல வருமானத்துடன் சுகமாக வாழ்வீர்கள் என்று அறியவும்.
இறந்து கிடக்கும் நல்ல பாம்பை கனவில் கண்டால் உங்கள் குடும்பம் அல்லது உறவினர் குடும்பத்தில் ஒரு துக்கச் சம்பவம் நடைபெறுமென்பதை அறியவும். ஒரு நல்ல பாம்பு உங்களைக் கண்டவுடன் பயந்து ஓடி தன் புற்றில் புகுவதைக் கனவில் கண்டால் உங்களுக்கு வர இருந்த ஆபத்துக்கள் எல்லாம் ஓடி மறைந்துவிடும்.
கனவில் கட்டுவிரியான் பாம்பு வந்தால்
கட்டுவிரியான் பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு தொழில் முறையிலும், குடும்பத்திலும் சில இக்கட்டுகள் ஏற்பட்டு பிறகு விலகும். ஆனால் இதை நினைத்து மன வேதனை அடைய வேண்டாம். புயல் போல கஷ்டத்தைக் கொடுத்து உடனே மறைந்துவிடும்.
சாரைப்பாம்பு கனவில் வந்தால்
சாரைப் பாம்பு தன்னைக் கண்டு சர்ரென்று ஓடுவதை கனவு கண்டால் உங்கள் கஷ்டம் விலகும் காலம் வந்து விட்டது. இனி மேல் வாழ்க்கை நிலை உயரும். நல்ல வருமானம் கிடைக்கும்.
சாரைப் பாம்பும், நாகப்பாம்பும் ஒன்றாக இணைந்து நிற்பதைக் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு யோகம் காத்திருக்கிறது என்பதையும், அதன் காரணமாக ஒரு பெரிய செல்வம் வந்து சேரும் என்பதை அறியவும். அதைக் கொண்டு உங்கள் வாழ்நாள் முழுவதும் சுகமாக வாழ்வீர்கள்.
சாரைப் பாம்பு தன்னை விரட்டிக்கொண்டு வருவதாகக் கனவு கண்டால் வாழ்க்கையில் சில கஷ்ட, நஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும். இருந்தாலும் அதிக சிரமத்தை அநுபவிக்க வேண்டி இருக்காது.
சாரைப் பாம்பு மரத்தில் ஏறுவதைக் கண்டால் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. கஷ்டம் விலகப் போகிறது, நல்ல வருமானத்துடன் சுகமாக வாழும் காலம் வந்து விட்டது என்பதை அறியலாம்.
சாரைப் பாம்பு தன் வாயில் ஒரு தவளையைக் கவ்விக் கொண்டிருப்பதைக் கனவு கண்டால் தனக்கு வர இருந்த ஒரு பெரிய ஆபத்து விலகப் போகிறது, இனிமேல் வாழ்க்கையில் எந்த விதமான கஷ்டமுமின்றி சுகமாக வாழப் போகிறீர்கள் என்பதை உணரலாம்.
மலைப் பாம்பு கனவில் வந்தால்
மலைப்பாம்பு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இது ஒரு துரத கஷ்டமான செய்தியை கொண்டு வரும் என்று அர்த்தம். மேலும் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கனவு காண்பவர் சிறிதளவு அசிங்கப்பட்டு தலை குனிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.
மலைப் பாம்பு மரத்தில் சுற்றியிருப்பதாகக் கனவு கண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும்.
மலைப் பாம்பு உங்கள் உடலைச் சுற்றிக் கொள்ளுவதாகக் கனவு கண்டால் உங்களுக்கு வர இருந்த மிகப் பெரிய ஆபத்து விலகி விட்டது என்பதாகும்.
மலைப் பாம்பு உங்களை பார்த்து விலகி செல்லவதாக கனவு கண்டால் உங்களுக்கு கஷ்டங்கள் தீர்ந்து நற் செய்தி வரப்போகிறது என்று குறிக்கிறது.இந்த பதிவில்
நாம் கனவில் பாம்பு வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். மேலும் கனவு பலன்கள் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.