மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து எப்படி செய்வது ?( piles home remedy ) மூலநோய் தோன்ற மலச்சிக்கலே காரணமாகும். மலச் சிக்கலை கவனியாது விடுவதன் காரணத்தினால் தான் மூல நோய் வருகிறது. 

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து எப்படி செய்வது ?( piles home remedy ) மூலநோய் தோன்ற மலச்சிக்கலே காரணமாகும். மலச் சிக்கலை கவனியாது விடுவதன் காரணத்தினால் தான் மூல நோய் வருகிறது. 

மூலம் நோய் அறிகுறிகள்

மலச்சிக்கலில் மலம் இறுகி வெளியேற முடியாமல் கஷ்டப்படும் பொழுது அம்மலத்தை வெளியேற்ற முக்க வேண்டி இருக்கும். இப்படி மூச்சைப் பிடித்து முக்கும் பொழுது இறுகிய மலம், மலத்துவாரத்தை அழுத்தமாக அழுத்திக் கொண்டே வெளியேறும். இந்தச் சமயம் மலத் துவாரத்தில் ஒரு பிதுக்கம் தோன்றும், பிறகு சரியாகிவிடும். தினசரி அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த மலத்துவாரத்தில் பிதுக்கம் ஏற்பட்டு அங்கு சதை வளர ஆரம்பிக்கும். நாளாவட்டத்தில் இந்தச் சதை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து, மலம் வெளியேறும் பொழு தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி மலம் வெளியேறிய பின் உள்ளே போய்விடும். நாளாவட்டத்தில் இது கொட்டைப்பாக்கு அளவு பெருத்த பின், மலம் கழித்த பின் அது உள்ளே போகாமல் வெளியிலேயே நின்றுவிடும். இப்படியாகப் பல மாதங்கள், வருடங்கள் வரை மூலம் வெளியே வருவதும் அதை உள்ளே தள்ளுவதுமாகக் காலம் தள்ளும்.

பிறகு, இது தக்காளிப் பழம் அளவு பெருத்த பின் அதன் பக்கத்தில் ஒரு சிறு மூலம் தோன்றும். இது சற்று வளர்ந்தபின் உள்ளே போகாது. வெளியே நின்றுவிடும். உள்ளே தள்ளினாலும் வெளியே வந்துவிடும். ஆனால், பெரிய மூலம் மட்டும் உள்ளே போய்விடும்.

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

மூலம் நோய் படங்கள்

மூலம் நோய் படங்கள் மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

இந்த நிலையில் பல வருடங்கள் தள்ளும். இந்தச் சமயம் உடலில் உஷ்ணம் அதிகரிக்கக் கூடிய பொருட்களை உண்டால், மலம் கழிக்கும் பொழுது, இறுகலான மலம் மூலத்தை உராய்ந்து கொண்டு வெளியேறும். இந்தச் சமயம் மூலத்தின் மேலுள்ள மிக மெல்லிய தோல் கழன்று விடும். இதன் காரணமாக மூலத்திலிருந்து இரத்தம் வெளியேறும். துளித்துளியாகச் சொட்டும். சில சமயம் இந்த இரத்தம் பீச்சாங்குழலில் அடிப்பது போல சர்ர்ர் என்று கூட அடிக்கும். இந்தச் சமயம் வேகமாக வேலையை முடித்துக் கொண்டு மூலத்தை உள்ளே தள்ளிக் கழுவி விட வேண்டும். வேலையை வேகமாக முடிக்காவிட்டால் இரத்தம் அதிக அளவில் வெளியேறி உடல் பலத்தைக் குறைக்கும்.

இப்படி இரத்தம் போக ஆரம்பித்தால் காரத்தை தவிர்க்க வேண்டும். மூன்று வேளைக்கு மட்டும் சாதத்துடன் கட்டித் தயிர் தேவையான அளவு விட்டு சாப்பிட வேண்டும். இரத்த மூலத்திற்கான மருந்துகளையும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் மூலம் போவது நின்று விடும்.

மூலநோயினால் பாதிக்கப்படுகிறவர்கள் மூலநோயை குணப்படுத்தும் மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து , மருந்துகளைக் கொண்டு மூலத்தை குணப் படுத்த பிரயாசை எடுக்க வேண்டும். இல்லையேல், மூலம் நாளா வட்டத்தில் பெருத்து உள்ளே செல்ல முடியாமல் வெளியிலேயே தங்கி மேலும் பருத்து அதுவே பவுத்திரமாக மாறி விடுவதும் உண்டு.

எந்த வகையான மூல நோயாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்து ஆகாரத்திலும் கவனம் செலுத்தி வந்தால், அது பூரணமாகக் குணமாகும்.

மூலம் நோய் குணமாக உணவு

மூலம் நோய் குணமாக உணவு மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து
மூலம் நோய் குணமாக உணவு மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து மூலநோயினால் , மூலம் நோய் குணமாக உணவு , பாதிக்கப்பட்டவர்களும், மூலநோய் குணமாக மருந்து சாப்பிட்டு வருபவர்களும் கீழ்க்கண்ட பொருட்களை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தணியும்.

சாப்பிட வேண்டியதுசாப்பிடக் கூடாதது
முள்ளங்கிக்கிழங்கு மொச்சைக்காய்
வாழைப்பிஞ்சுமடவைமீன்
வாழைப்பூகுறவை மீன்
புளியாரைக் கீரைபலாக் கொட்டை
பெருங்காயம்தேன்
பால், மோர்பனம்பழம்
வெண்கீரைத்தண்டுமிளகாய்ப்பழம்
வெங்காயம்கத்தரிக்காய்
நத்தைக்கறி
அத்திப்பிஞ்சு
கோழிக்கறி
சாளூக் கருணைக்கிழங்கு
வாழைப்பழம்
செவ்வாழைப்பழம்
கொய்யாப்பழம்
வெண்ணெய், நெய்
தக்காளிப்பழம்
அவரைப்பிஞ்சு
சேப்பங்கிழங்கு
பீர்க்கங்காய்
மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

மூலநோய் குணமாக

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து மொடக்கொத்தான் வேரைக் கொண்டு வந்து, தண்ணீரில் கழுவி, பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் மூலநோய் குணமாகும்.

நன்றாகச் செழித்து வளர்ந்து பூவும், காயுமாக உள்ள குப்பைமேனிச் செடியை வேர் அறுந்துவிடாமல் பிடுங்கி வந்து, தண்ணீரில் கழுவி சுத்தம் பார்த்து, அதைப் பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்து சருகு போலக் காய்ந்த பின் கல்லுரலில் போட்டு, நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை மாலை இரண்டு சிட்டிகை அளவு எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து, அரைத் தேக்கரண்டி அளவு பசுவின் வெண்ணெயில் கலந்து கொடுத்து வந்தால் மூலநோய் பவுத்திரம் குணமாகும். ஆனால் தொடர்ந்து நாற்பது நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் மோர், தயிர், நெய் தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆவாரம் பூவைக் கொண்டு வந்து இதழ்களை மட்டும் 50 கிராம் எடுத்து, அதே அளவு அறுகம்புல்லையும்சேர்த்துப் பொடியாக நறுக்கி, வெய்யிலில் காயவைத்து சருகுபோலக் காய்ந்தபின் கல்உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை அரைத் தேக்கரண்டித் தூளுடன், தேக்கரண்டி அளவு பசுவின் நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

20 கிராம் மந்தார மொக்குகளைக் கொண்டு வந்து அதை நைத்து ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை அரை டம்ளர் அளவு கஷாயத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்துவிட வேண்டும். தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மூலம் படிப்படியாகக் குணமாகும்.

வெளிமூலம் நோய் குணமாக மருந்து

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து கருணைக் கிழங்கைப் பருப்புடன் சேர்த்தோ தனி யாகவோ சமைத்து பகலில் மூன்று எலுமிச்சம் பழ அளவும், இரவில் ஒரு எலுமிச்சம்பழ அளவும் சாதத்துடன் சேர்த்து, தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

மூலநோயினால் கஷ்டப்படுகிறவர்கள் துத்தி இலையைக் கொண்டு வந்து அதைச் சட்டியில் போட்டு வதக்கி விளக்கெண்ணெய் தடவி, ஆசனத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூலம் வரவரச் சுருங்கி பூரணமாகக் குணமாகும்.

இரத்த மூலம் நோய் குணமாக மருந்து

குப்பை மேனி இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அத்துடன் தேக்கரண்டி அளவு தேன் சேர்த்துக் குழைத்து காலையிலும் மாலையிலும் கொடுத்து வந்தால் இரத்த மூலம் குணமாகும்.

மாதுளம் பூக்களைக் கொண்டு வந்து வெய்யிலில் காய வைத்து, வேலம்பிசின் 30 கிராம் எடுத்து வெய்யிலில் காய வைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு காற்றுப் புகாமல் மூடிவைத்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவுத் தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.

மூலம் நோய்க்கு எளிய மருந்து
மூலம் நோய்க்கு எளிய மருந்து

மூலம் நோய்க்கு எளிய மருந்து

மாதுளம் பூக்களில் ஐந்து கொண்டு வந்து சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதித்தபின் இறக்கி, வடிகட்டி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் மூலம் குணமாகும்.

மூலத்தின் ரணம் ஆற

  • பாவட்டைச் செடியின் இலைகளைக் கொண்டு வந்து அதை ஒரு சட்டியில் போட்டுத் துவலும் அளவிற்கு வதக்கி எடுத்து மூலத்தில் அதாவது ஆசனத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூலப்புண் ஆறிவிடும்.
  • பேய்ச் சுரைக்காய் இலையைக் கொண்டு வந்து விளக் கெண்ணெய் தடவி வதக்கி மூலத்தின் மேல் வைத்துக் கட்டி வந்தால் மூலரோகம் குணமாகும். எட்டு வகையான மூல நோய்

எட்டு வகையான மூல நோய் உண்டு. உள்ளே இருக்கும் மூலத்தை உள்மூலமென்றும், வெளி தங்கி விட்ட மூலத்தை உ வெளிமூலமென்றும், பூச்செண்டு போல உள்ள மூலத்தை செண்டு மூலமென்றும் இரத்தம் கசிந்துகொண்டேயிருந்தால் இரத்த மூலமென்றும், சீழ் கசிந்து கொண்டேயிருந்தால் சீழ்மூலமென்றும், சலம் கசிந்து கொண்டே இருந்தால் சல மூலமென்றும், மூலத்தில் புண் கண்டால் கிரந்தி மூலமென்றும், மூலம் நீண்டு ஆணி போல இருந்தால் ஆணி மூலமென்றும் சொல்லப்படுகிறது. மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து.

எட்டு வகையான மூலநோயும் குணமாக

மூக்கிரட்டை இலையைக் கொண்டு வந்து அதைச் சுத்த மாகக் கழுவி அரைத்து அதில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசிமாவுடன் சேர்த்து அரைத்து, சிறிய அடைகளாகத் தட்டி, எண்ணெயில் வேகவைத்து எடுத்து காலை, மாலையாக ஏழு நாள் தொடர்ந்து கொடுத்து வந்தால் மூலநோய் குணமாகும். நாட்பட்ட மூலரோகமானாலும் குணமாகும். ஏழு நாட்களில் குணம் தெரியவில்லையானால், மேலும் ஏழுநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பூரண குணம் ஏற்படும்.

நாம் மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து தெரிந்து கொண்டோம். மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *